17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் மண்டை உடைப்பு! தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் உட்பட மூன்று பேர் கைது..

பாலக்கோடு அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் மண்டை உடைப்பு! தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளர் உட்பட மூன்று பேர் கைது..

எழுதியவர்: Askar May 24, 2020, 9:32 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமஅள்ளி அரசு மதுபான கடையில் கடந்த 7ம் தேதி  பி.கொல்ல அள்ளி கிராமத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டன் மாதேஸ்வரன் (39 ) என்ற வாலிபர் டோக்கன் பெறாமல் நேரடியாக மது கேட்டு கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டு போலீசாரை தகாத வார்தையால் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று சிறையில் இருந்து வெளியே வந்த மாதேஸ்வரன் தனது நண்பர்களுடன் அரசு மதுபான கடை அருகே சென்று பிரச்சினை க்கு காரணமாக இருந்த  அதே கிராமத்தை சேர்ந்த அர்சுணன் என்பவரிடம் கைகலப்பு ஏற்பட்டு மரக்கட்டை, பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் மூர்க்கமாக தாக்கியதில் அர்சுணன் மண்டை உடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் பாலக்கோடு சாவடி தெருவை சேர்ந்த பட்டாபி(40), பி.கொல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரன்(38), ரவிக்குமார்(31) ஆகிய மூன்று நபர்கள் கைது செய்து பாலக்கோடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!