17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மடப்புரம்  ஊராட்சியில் 1200  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

மடப்புரம்  ஊராட்சியில் 1200  குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

எழுதியவர்: mohan May 24, 2020, 4:02 pm

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  மடப்புரம் ஊராட்சியில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. பவுன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை   வழங்கினார்.செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அன்றாடத் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த பூம்புகார் தொகுதி சட்ட மன்ற ஆஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி சார்பாக வழங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் செம்பைஅதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடி பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜ் நிஷா செல்வநாயகம், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்கண்ணன் மற்றும் கழக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இரா.யோகுதாஸ்,மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!