17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர்.

எழுதியவர்: mohan May 24, 2020, 3:06 pm

மதுரை எம்.சி.மேல்நிலைப் பள்ளியில் கோவில்களில் வேதம் ஒதும் குருக்கள், நாதஸ்வர, மேள கலைஞ்ர்களுக்கு சமூக ஆர்வலர் நெல்லை பாலு சார்பில் இலவச அரிசி, காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.பின்னர் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி,

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது,யார் புகார் கொடுத்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,தமிழக காவல்துறை ஆற்றும் பணியில் உலகமே பாராட்டி வருகிறது.புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து அவருடைய முட்டாள்தனத்தை வெளிப்படுத்துகிறார். இந்தியாவிற்கே முன்மாதிரியாக கொரோனா கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.அதனை பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் குறைகூற காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.சுயநலமாக அவர் செயல்படுவது வெளியே தெரிந்து விடும் என்பதற்காகவே இந்த நாடகமாடுகிறார்.புத்தர் போன்ற காந்தி போன்ற அவதாரம் எடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முயற்சி எடுக்கிறார்,அந்த முயற்சி பலன் கொடுக்குமா கொடுக்காத என்பதே பொதுமக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள்என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது பேட்டியில் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!