18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா நோய் குணமானவரை வீட்டு உரிமையாளர் தாக்கினாரா? மதுரையில் பெரும் பரபரப்பு

கொரோனா நோய் குணமானவரை வீட்டு உரிமையாளர் தாக்கினாரா? மதுரையில் பெரும் பரபரப்பு

எழுதியவர்: mohan May 24, 2020, 12:35 pm

மதுரை கூடல்புதூர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37). இவருக்கு மனைவி குழந்தை உள்ளன.சென்னை அரசினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மணிமாறன் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனவே மணிமாறன் மதுரைக்கு திரும்பினார்.கூடல்புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து பார்த்தனர்.

இதில் அவருக்கு மட்டுமின்றி மனைவி, குழந்தைக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மேற்கண்ட 3 பேரும் மதுரை பல்நோக்கு மருத்துவமனை பிரத்யேக வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் மணிமாறனுக்கு நோய் குணமாகி நேற்று இரவு பத்திரமாக வீடு திரும்பினார்.அப்போது அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.எனவே போலிசார் இந்த விவகாரத்தில் தலையிட்டு, 2 பேரையும் சமாதானப் படுத்தினர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மணிமாறனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

மதுரையில் கொரோனா நோய் குணமாகி மீண்டும் வீடு திரும்பியவரை வீட்டு உரிமையாளர் தாக்கியது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் விசாரித்த போது,”மணிமாறன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் சமரசம் செய்து வைத்தனர். மணிமாறன் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இருதரப்பும் புகார் தரவில்லை” என்று தெரிவித்து உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!