18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே சித்த மருத்துவர் பெண் தற்கொலை. ஆர்டிஓ விசாரணை

நிலக்கோட்டை அருகே சித்த மருத்துவர் பெண் தற்கொலை. ஆர்டிஓ விசாரணை

எழுதியவர்: mohan May 24, 2020, 12:24 pm

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த மனோகரன் மனைவி சியாமளாதேவி  30. இவர் சித்த மருத்துவ படிப்பு படித்துள்ளார். இவர் சிலுக்குவருபட்டி சேர்ந்த மனோகரன் என்பவரை   கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருவருக்கும் இரட்டை. பெண் குழந்தைகள் . இந்நிலையில்  சியாமளா தேவி கணவன் மனோகரன் மற்றும் தந்தை ராமதாஸ் ஆகியோர்கள் நீ குண்டா இருக்கிறாய் எனக் கூறி கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதனால் உன்னை எங்கும் அழைத்துச் செல்ல முடியாது என கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்கள்.

  இதனால் மனம் வெறுத்துப் போன சியாமளாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சியாமளா தேவியின் உடலை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டது. இதன்பின்னர் சியாமளா தேவியின் உறவினர் முத்துமாரி வயது 35 என்பவர் கொடுத்த புகாரின் படி நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.    இருப்பினும் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் இதுகுறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!