கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுரக்காடு குரங்குகள் உணவு இல்லாமல் தவித்து வருகிறது. மரங்களில் அமர்ந்து யாரேனும் உணவுகள் தருவார்களா என்று ஏங்கித் தவித்தன. உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வரும் சமூக ஆர்வலர்கள் குரங்குகளின் பரிதாப நிலை அறிந்து தினந்தோறும் பிஸ்கட், பழங்களைக் குரங்குகளுக்குக் கொடுத்து வருகின்றனர் சமூக ஆர்வலர் விஜயரங்கன், அப்துல் ரவூப், வேதா ஸ்டாலின்.
இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.




You must be logged in to post a comment.