17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரத்தம் வழங்கியவருக்கு ஓட்டுனர் சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது வாழ்த்து

இரத்தம் வழங்கியவருக்கு ஓட்டுனர் சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது வாழ்த்து

எழுதியவர்: mohan May 24, 2020, 11:17 am

ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் தாஜ் நிஷா என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவருக்கு உடனடியாக O+ ரத்தம் தேவைப்பட்டது.இந்த நிலையில் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது தந்தை முருகேசன் தாயார் செல்வராணி. இவர் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வெழுதி முடித்திருக்கிறார்.

தற்போது பள்ளி விடுமுறையின் காரணமாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இல் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.இந்த தகவலை கேட்டதும் பாதுகாப்பு பணியில் இருந்தும் உடனடியாக விரைந்து வந்து இரத்தம் வழங்கினார் ரத்தம் வழங்கிய அன்பழகனை பொதுமக்களும், டாக்டர்களும் காவல்துறை அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர் நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் மாநில தலைவர் சாகுல் ஹமீது தனது வாகனத்தில் அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!