17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உறவுக்கும்.. நட்புக்கும் இலக்கணம் மதுரை.. செவிலியரை வாழ்த்தி வரவேற்ற மதுரை மக்கள்..

உறவுக்கும்.. நட்புக்கும் இலக்கணம் மதுரை.. செவிலியரை வாழ்த்தி வரவேற்ற மதுரை மக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 12:19 am

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனோ பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியருக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனோ பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்தவர் சுதா.

இவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையிலேயே பணியாற்றி சேவை புரிந்து வந்துள்ளார். இன்று (23/05/2020) பணி முடிந்து மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகேயுள்ள பேச்சியம்மன் படித்துறை அவருடைய இல்லத்திற்கு வருகை தந்த பொழுது அப்பகுதி மக்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஆரத்தி எடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!