கோவிட்-19 தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழக அரசுபிறப்பித்த பொது ஊரடங்கு உத்தரவினைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலத் துறை மூலம் நல வாரியங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் வாழ்வாதார தேவைகளுக்கு உதவிடும் வகையில் முதற்கட்டமாக ரூ.1000 வீதம் 119 நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. நல வாரிய மூலம் குடும்ப அட்டை பெற்ற 70 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களான 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக ரூ.1000 வீதம் 119 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவித் தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (23.5.2020) வழங்கினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் வி.ஜெயந்தி உடனிருந்தார்.
ராமநாதபுரத்தில். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
எழுதியவர்: mohan May 23, 2020, 5:51 pm




You must be logged in to post a comment.