17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாவால் தடை செய்யப்பட்ட மானூத்து கிராம மக்களுக்கு அமமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனாவால் தடை செய்யப்பட்ட மானூத்து கிராம மக்களுக்கு அமமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan May 23, 2020, 5:02 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மானூத்து கிராமத்தில் சென்னையிலிருந்து வந்த பெண்னுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அக்கிராமம் சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்டது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த மானூத்து கிராமப் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இ.மகேந்திரன் கலந்து கொண்டு 400 குடும்பங்களுக்கு அரிசி காய்கறி நிவாரணப் பொருள்களை வழங்கினார். பொதுமக்களும் சமூக இடைவெளி விட்டு பொருள்களை வாங்கிச் சென்றனர்.இதில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மலேசியா பாண்டியன், நகரச் செயலாளர் குணசேகரப் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டியன். எழுமலை பக்ரூதின், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சின்னச்சாமி, ஜெயராமன், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு வழங்கினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!