17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கல்வி » செய்திகள் » தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ் மன்றத்தின் சார்பாக கருத்தரங்கம்…

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ் மன்றத்தின் சார்பாக கருத்தரங்கம்…

எழுதியவர்: ஆசிரியர் August 9, 2017, 1:34 pm

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (09.08.2017) காலை 11.00 மணியளவில் தமிழ்த்துறை தாசிம் பீவி தமிழ் மன்றத்தின் சார்பாக கருத்தரங்கம் இறை வணகக்த்துடன்தொடங்கியது.

இந்நிகழ்வில் ஜா.ஆரோக்கிய குரோசியா முதலாமாண்டு கணிதத்துறை மாணவி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா தலைமையுரையாற்றினார். முனைவர் ஏ. இ. ஜி. சி. ரஜனி, கலைப்புல முதன்மையர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் விருந்தினதைக் கௌரவித்தார். சிறப்பு விருந்தினராக முனைவர் சு. காந்திதுரை, இணைப்பேராசிரியர் தியாகராசர் கல்லூரி, மதுரை கலந்து கொணடு “இலக்கியத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் பெண் கல்வி முன்னேற்றம், இலட்சியம், சுதந்திரம், பெண்மை, தாய்மமை, இறைமை பற்றியும் பெண் சாதனையாளர்கள் பற்றியும் உரையாற்றினார்.

இக்கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் வே. அகிலா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தார்கள். ச.சிவரஞ்சிதா, முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி நன்றியுரை வழங்க கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!