17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி திடீரென கைது!

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி திடீரென கைது!

எழுதியவர்: Askar May 23, 2020, 7:53 am

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி திடீரென கைது!

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

நீதிபதிகள், பட்டிலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள 2 வழக்குகளின், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக ஆர்.எஸ் பாரதியை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!