18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தடுப்பு பணி, பொதுமக்களுக்கு உதவும் பணியில் தென்காசி மாவட்ட சுரண்டை பகுதி பத்திரிகையாளர்கள்..

கொரோனா தடுப்பு பணி, பொதுமக்களுக்கு உதவும் பணியில் தென்காசி மாவட்ட சுரண்டை பகுதி பத்திரிகையாளர்கள்..

எழுதியவர்: Askar May 23, 2020, 5:24 am

கொரோனா தடுப்பு பணி, பொதுமக்களுக்கு உதவும் பணியில் தென்காசி மாவட்ட சுரண்டை பகுதி பத்திரிகையாளர்கள்..

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் பணியில் தென்காசி மாவட்ட சுரண்டை பகுதி பத்திரிகையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் காவல்துறை, பேருராட்சி, சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வலர்களுக்கு கஞ்சி வழங்கி பசி போக்கினர். அதனை தொடர்ந்து ஏழை எளிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

தற்போது சுரண்டை பகுதி வியாபாரிகள் ஒத்துழைப்புடன், காவல்துறையுடன் இணைந்து சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் முன்பு ஒலிபெருக்கி மூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தென்காசி,சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கொரோனா கால நிகழ்வுகளை உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளாக பிரசுரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!