18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் விண்ணை தொடும் ஆட்டிறைச்சி விலை..

கீழக்கரையில் விண்ணை தொடும் ஆட்டிறைச்சி விலை..

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2020, 4:22 pm

கீழக்கரையில் ரமலான் மற்றும் முக்கிய விசேஷ காலங்களில் மக்கள் அதிகமாக வாங்குவது ஆட்டிறைச்சி தான்.

தற்சமயம் கொரோனா எனும் கொடிய தொற்று நோய் சூழ்ந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியாகவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். இத்துடன் புனித ரமலான் மாதம் தொடக்கத்தில் ரூ.700/-கு விற்கப்பட்ட இறைச்சி இன்று (22/05/2020) ரூ.800/-கு கிலோ விற்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கீழக்கரையில் அனைத்து ஜமாஅத், சமூதாய கட்சிகள், இயக்கங்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் கீழக்கரை முக்கியஸ்தர்கள் ஓன்றுகூட நல்ல முடிவெடுத்து விலையே ஒரு வரையறுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த ஊரடங்கால் வியாபாரிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது மறுக்க முடியாது, ஆனால் அதே சமயம் அனைத்து தரப்பு பொதுமக்களின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!