17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக வேலை நேரத்தை 12 மணிநேரம் ஆக்காதே என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக வேலை நேரத்தை 12 மணிநேரம் ஆக்காதே என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar May 22, 2020, 2:57 pm

அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக வேலை நேரத்தை 12 மணிநேரம் ஆக்காதே என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர் சட்டங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையை எதிர்த்து 12 மணி நேரமாக அதிகரிக்காதே! பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கு என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22-5-20 அன்று நாடு தழுவிய கண்டன இயக்க ஆர்ப்பாட்டத்தை ஒட்டி,

திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு பசீர் அகமது எல் பி எப் தலைமையில் கே.ஆர்.கணேசன் சிஐடியு , ஜெயமணி ஏஐடியுசி , மோகன் எம்எல்எப் , அழகர்சாமி எல்பிஎப், மணிவேல் ஏஐசிசிடியு, பசும்பொன் பார்வார்டு பிளாக் , கண்ணன் ஐஎன்டியுசி ஆகியோருடன் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேகம்பூரில் ஜெயசீலன் சிஐடியு, ராமமூர்த்தி எல்பிஎப் தலைமையில் 20 பேர் கலந்து கொண்டனர். ரயில்நிலையம் அருகில் காட்டுராஜா டிஆர்இயு தலைமையில் 15 பேரும் நாகல்நகரில் பிரபாகரன் சிஐடியு , பாலு எல்பிஎப், ராஜாங்கம் ஏஐடியுசி தலைமையில் 25 பேர் , பழனி போக்குவரத்து பணிமனை முன்பு பிச்சைமுத்து சிஐடியு , அய்யனார் எல்பிஎப் தலைமையில் 40 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். சின்னாளபட்டி பஸ்நிலையம் அருகே வி.கே.முருகன் சிஐடியு தலைமையில் 70 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போக்குவரத்து பணிமனைகள் முன்பு 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!