17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரண்டு மாதங்களுக்கு முன் திருடப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல் துறையினர்..

இரண்டு மாதங்களுக்கு முன் திருடப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல் துறையினர்..

எழுதியவர்: Askar May 22, 2020, 5:45 am

இரண்டு மாதங்களுக்கு முன் திருடப்பட்ட மாடுகள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல் துறையினர்..

தேனி மாவட்டம் பெரியகுளம், கீழ வடகரை, கரட்டூரைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் (வயது 19) பாண்டி (வயது 35) ஆண்டிபட்டியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 29) சிவக்குமார் (வயது 30) ஆகியோர் பெரியகுளத்திலிருந்து மாடுகளைத் திருடி,டாடா ஏ.சி. இ, வாகனம் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் ,சார்பு ஆய்வாளர் செல்வராசு உடன் தமீம் அன்சாரி பாலமுருகன் ஆகியோர் உடனடியாக மாடுகளை ஏற்றிச் சென்ற நான்கு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு விற்கப்பட்ட இரண்டு மாடுகளையும், இரண்டு மாதத்திற்குப் பின் மீட்கப்பட்டு மாடுகளுக்கு சொந்தக்காரரான ராஜேஷ் கண்ணனிடம் ஒப்படைத்தனர் பெரியகுளம் காவல் துறையினர், மாடுகள் திருடிய வழக்கில் தொடர்புடைய 4, பேரையும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு, சிறையிலடைத்தனர். A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!