18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டையில் ராஜீவ்காந்தி நினைவு தினம்;தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி-காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்பு..

சுரண்டையில் ராஜீவ்காந்தி நினைவு தினம்;தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி-காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்பு..

எழுதியவர்: Askar May 22, 2020, 5:39 am

சுரண்டையில் ராஜீவ்காந்தி நினைவு தினம்;தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி-காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்பு..

சுரண்டையில் ராஜீவ் காந்தி நினைவு தினம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது.தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் தலைமையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29வது நினைவு தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் திருவுருவ படத்திற்கு எஸ்.பழனி நாடார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவிகள் செய்ய வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் கேட்டுக்கொண்டார்.

சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகவேல், மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் விஏ சமுத்திரம், ஆலடி ராமராஜ், மாநில ஊடக பிரிவு பொதுச் செயலாளர்,.சிங்கராஜ், மாநில பேச்சாளர் பால்துரை, மாவட்ட அமைப்பு சாரா அணி தலைவர் பிரபாகர், வர்த்தக காங்கிரஸ் சமுத்திரம், வட்டார காங்கிரஸ் செயலாளர் தெய்வேந்திரன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அருணாசலக்கனி, மணிகண்டன், ஆலங்குளம் பந்தல் அருணாசலம், குணசேகரன், ராமர் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!