17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் நியாயவிலை கடையில் முறைகேடு புகார்: அதிகாரிகள் திடீர் ஆய்வு; சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.!

செங்கம் நியாயவிலை கடையில் முறைகேடு புகார்: அதிகாரிகள் திடீர் ஆய்வு; சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.!

எழுதியவர்: Askar May 22, 2020, 5:34 am

செங்கம் நியாயவிலை கடையில் முறைகேடு புகார்: அதிகாரிகள் திடீர் ஆய்வு; சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.!

செங்கம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்காமல் ஒரு டன் அரிசி இருப்பு வைத்திருந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து சேல்ஸ்மேன் மீது நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார் கரோனா தடுப்பு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது இந்நிலையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக அரிசி வழங்க உத்தரவிட்டது. ஆனால் சங்கம் சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள கற்பகம் நியாய விலை கடையில் அனைத்து அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் சரிவர இயங்குவதில்லை பாதிப் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு இருப்பு இல்லை என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். ரேஷன் பொருட்களை விலை சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்ப்பதாக சேல்ஸ்மேன் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மனுக்கள் அனுப்பியுள்ள நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைக்கு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது குடும்ப அட்டைக்கு வழங்க வேண்டிய ஒரு டன் அரிசி இருப்பு தெரியவந்தது. சமையல் பொருட்களும் இருப்பு இருப்பது தெரியவந்தது. சேல்ஸ்மேன் முறையாக செய்யவில்லை என்றும் தெரியவந்ததையடுத்து நியாயவிலைக் கடை சேல்ஸ்மேன் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் பரிந்துரை செய்தார். நிகழ்வின்போது செங்கம் வட்ட வழங்கல் அலுவலர் சுமதி உடனிருந்தார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!