18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார்…

தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார்…

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2020, 1:27 am

ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் வாங்கிய கடனை கேட்டு கட்டாய படுத்துவதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியரிடம் பெண்கள் மகளிர் குழுவினர் புகார். வாங்கிய கடனை கட்ட 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்து சூழ்நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு சில தளர்வுகள் அளித்தாலும் இன்னும் ஏராளமானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழுவினர் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் வாங்கிய கடனை கேட்டு வற்புறுத்துவதாகவும், தாங்கள் வாங்கிய கடனை செலுத்த கூடுதலாக 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் கிருஷ்ணவேணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மகளிர் சுய உதவிக்குழு குழுவினரிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!