17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எழுதியவர்: mohan May 21, 2020, 5:56 pm

மதுரையில் இருந்து 2 ஆம் கட்டமாக சிறப்பு ரயில் மூலம் 1600 , பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழியனுப்பி வைத்தார்.கடந்த 18 ஆம் தேதி 1600 தொழிலாளர்கள் உத்திரப்பிரதேசம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று பீகார் மாநில தொழிலாளர்கள் 1500 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரையிலிருந்து 1114 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 456 பேரும் இன்று பீகாருக்கு சிறப்பு இரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.முன்னதாக, பணிபுரிந்த இடத்தில் இருந்து பேருந்துகள் வழியே அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.சமூக இடைவெளி தொழிலாளர்கள் அமர வைக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுகள் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது. இவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், இந்த தொழிலாளர்களை அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!