தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சில தினங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து சொந்த ஊரான அரியநாயகிபுரத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் நண்பர்கள் என 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ய அனுப்பிவைக்கப்பட்டது.
அதில் மேற்கண்ட நபரின் மாமியார் (80) மற்றும் உறவினர்கள் 29, 15, 13 வயதுடைய வர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அரியநாயகிபுரத்தில் முகாமிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் நீவீர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அரியநாயகிபுரம் கிராமம் சீல் வைக்கப்பட்டு வெளி நபர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.