18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…

எழுதியவர்: Askar May 20, 2020, 11:25 pm

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் திடீரென ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பெரியகுளம் குடிமராமத்து பணியை துவக்கி வைக்க வருகை புரிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் திடீரென அரசு மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு செய்தார்.

நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் கேட்டறிந்தார்.

அப்போது, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல், அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தங்கச் சாமி, வட்டாட்சியர் அழகப்ப ராஜா, வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, நகராட்சி ஆணையர் (பொ) மற்றும் சுகாதார அறுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர் மாரிச்சாமி இளநிலை பொறியாளர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் சென்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!