17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு உத்தரவால் உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிராமக் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பூசாரிகள் வேதனை தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவால் உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிராமக் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பூசாரிகள் வேதனை தெரிவித்தனர்.

எழுதியவர்: mohan May 20, 2020, 7:28 pm

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. ஒருசில மாவட்ட பகுதிகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கருமாத்தூர், தும்மகுண்டு, ஆனையூர், பாப்பாபட்டி, நாட்டாமங்கலம் போன்ற கிராமங்களில் மிகப்பழமையான பொதுமக்கள் வழிபடும் கிராமக் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இதனால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

மேலும் கிராமகோவில்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோவிpல் பூசாரிகள், பராமரிப்பாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டு தற்போது வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.இதுவரை அரசுத் தரப்பிலோ தனியார் அமைப்பின் சார்பிலோ எவ்வித உதவித்தொகையும் வழங்காத நிலையில் தாங்கள் வருமானமின்றி குடும்பத்துடன் கஷ்டப்படுவதாக தெரிவித்தனர். தமிழக அரசு வேலையிழந்துள்ளவர்களுக்கு நிவாரணமாக சிநப்புத்தொகை, அரிசி. காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வரும் நிலையில் தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் கிராம கோவில் பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!