கொரானோ தொற்று பரவல் அச்சம் தொடரும் நிலையில்10 ம் வகுப்பு பொது தேர்வை ஜூன் 15ம் தேதிக்கு பதில் மற்றொரு கால அட்டவணைப்படி தேர்வை தொடங்க வலியுறுத்தி திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி, மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதல் படி ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தியிடம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ஏ.என்.ரகு, மாணவரணி அமைப்பாளர் துரைசாமி . இளைஞரணி துணை அமைப்பாளர்கள் குமரகுரு, ரமேஷ் கண்ணா. மாணவரணி துணை அமைப்பாளர்கள் கூரி தாஸ், ஹரி ராமபாண்டியன், ஒன்றிய துணைச் செயலர் புகழேந்தி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுரேஷ், பரமக்குடி நகர் மாணவரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் மனு அளித்தனர்.
கொரானா அச்சம் நீங்கிய பின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க ராமநாதபுரம் திமுக., இளைஞரணி மனு
எழுதியவர்: mohan May 20, 2020, 7:17 pm




You must be logged in to post a comment.