17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் காலை 10 மணிக்கு மேல் கடை திறந்தால் நடவடிக்கை செங்கம் வட்டாட்சியர் எச்சரிக்கை.!

செங்கம் பகுதியில் காலை 10 மணிக்கு மேல் கடை திறந்தால் நடவடிக்கை செங்கம் வட்டாட்சியர் எச்சரிக்கை.!

எழுதியவர்: Askar May 20, 2020, 6:40 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் காலை 10 மணிக்கு மேல் கடை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கம் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கம் தாலுகாவில் 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தாலுக்காவில் நோய் தொற்று பரவலை கடக்க அமலில் உள்ள 144 ஊரடங்கு தடை உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து அனைத்து வியாபாரிகள் தங்களது கடைகள் காலை 6 மணி முதல் பத்து மணிவரை திறந்துவைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என அனுமதிக்கப்படுகின்றது. எனவே அனைத்து தரப்பட்ட வியாபாரிகள் விதி மீறி கடை திறந்தால் சமூக இடைவெளி இல்லாமல் விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!