கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவினால் வேலையிழந்தபிற மாநில தொழிலாளர்கள்இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்தங்கியுள்ளனர். இவர்களை சிறப்பு ரயில் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதனையடுத்து இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, ராமநாதபுரம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், ரயில் நிலைய மேலாளர் சுபத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப முடிவு
எழுதியவர்: mohan May 20, 2020, 12:21 pm




You must be logged in to post a comment.