18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குளிக்க சென்ற வங்கி ஊழியர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குளிக்க சென்ற வங்கி ஊழியர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு…

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2020, 1:30 am

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியில் வசித்து வரும் அன்பு என்பவர் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை நத்தம்பட்டி அருகே உள்ள தலை மலையான் கோயில் அருகே உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவத்தில் சேர்ந்த நத்தம்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நத்தம்பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!