17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுத்தம், சுகாதாரம்,சுத்தமாக இல்லை; ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில்: சமூக ஆர்வலர்கள் வேதனை!

சுத்தம், சுகாதாரம்,சுத்தமாக இல்லை; ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில்: சமூக ஆர்வலர்கள் வேதனை!

எழுதியவர்: Askar May 19, 2020, 10:24 pm

கொரோனா நோய்தொற்று பரவிவரும் நிலையில் கண்டுகொள்ளாத ஆயக்குடி பேரூராட்சியின் சீர்கேட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவிவரும் சூழலில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஆயக்குடி பேரூராட்சியில் அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத நிலை தொடர்கிறது.

மாவட்ட நிர்வாகம் கொரோனா நோய்தொற்று குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க ஆயக்குடி பேரூராட்சி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் , கை அலம்புவதற்கு சோப்பு, கிருமிநாசினி உபகாரண பொருட்கள் பொது இடங்களில் வைக்க அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாத நிலையே இங்கு தொடர்கிறது. மேலும், தெருவிளக்குகள் பல்வேறு இடங்களில் எரியாமல் உள்ள நிலையில் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில். அடுக்கி வைக்கப்பட்டுள்ள புதிய தெரு விளக்குகள் பராமரிப்பின்றி கிடப்பதால் உடைந்து வினாகி கிடக்கிறது.மேலும் அலுவலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் எந்த அறிவுறுத்தலை மதிக்காமல் சிமெண்ட் மூடைகளை அலுவலகத்தின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் காற்று மாசு ஏற்படுவதோடு பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் ஆயக்குடி பேரூராட்சியின் முன்னால் இருக்கும் சிமெண்ட் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் இதனால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆயக்குடி பேரூராட்சியின் மெத்தன போக்கை சீர்படுத்திட வேண்டும் என ஆயக்குடி பேரூராட்சி வாழ் பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!