17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அகற்றப்படாத தடுப்பு சுவர்… இடித்து தள்ளிய பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் ஆவேசம்!!!!!!

அகற்றப்படாத தடுப்பு சுவர்… இடித்து தள்ளிய பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் ஆவேசம்!!!!!!

எழுதியவர்: ஆசிரியர் May 19, 2020, 7:49 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ளது தியாகராசர் காலணி. இந்த காலணிக்கு பின்புறம் பசுமலையில் இருந்து விளாச்சேரி செல்ல தார் சாலை உள்ளது.

இந்த தார் சாலையோடு தியாகராசர் காலனியில் இருந்து வரும் பாதை இணைகின்றது. இந்த பாதை இணையும் இடத்தில் தனியார் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதையின் குறுக்கே தடுப்புச் சுவர் கட்டி பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சியர உள்ளிட்டோரிடம் பலமுறை மனு அளித்து இந்த சுவரை அகறற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சுவரை கட்டிய நபர் இதே பகுதியை சேர்ந்த ஆளும்கட்சி எம் எல் ஏ வுக்கு நெருக்கமானவர் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தனர். இச்சூழலில் அப்பகுதி பொதுமக்கள் பாதையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சுவரை இடித்து தள்ளினர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!