18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ஒன்று கூடிய வடமாநில தொழிலாளர்கள்..சமரசத்தை தொடர்ந்து.. ரொக்கத்துடன் நிவாரணம்..

கீழக்கரையில் ஒன்று கூடிய வடமாநில தொழிலாளர்கள்..சமரசத்தை தொடர்ந்து.. ரொக்கத்துடன் நிவாரணம்..

எழுதியவர்: ஆசிரியர் May 19, 2020, 7:09 pm

வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கீழக்கரையில் கட்டிடப்பணி வேலையில் உள்ளனர். அவர்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படுவதாகவும் தங்களை ஊருக்கு அனுப்ப கோரியும் இன்று 19.5.2020 காலை கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை மெகா மூன் சூப்பர் மார்க்கெட் அருகில் கூட்டமாக திரண்டனர். உடனடியாக கீழக்கரை காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வந்து  சமாதானப்படுத்தி அவர்களை கூடிய விரைவில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பேன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்பு அவர்கள் கலைந்து சென்றார்கள்.

இதனை அறிந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் கீழக்கரை தி.மு.க நகர் மாணவரணி அமைப்பாளருமான V.S ஹமீது சுல்தான் உடனடியாக அவர்கள் தங்கியுள்ள இடத்தை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் ரொக்க தொகை கொடுத்து உதவினார்.

இன்னும் சில தினங்களில் அவர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்யப்படும் என உறுதியளித்தார்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!