17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் தொகுதிக்குட்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வழங்கினார்..

செங்கம் தொகுதிக்குட்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வழங்கினார்..

எழுதியவர்: Askar May 19, 2020, 5:58 pm

செங்கம் தொகுதிக்குட்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வழங்கினார்..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி வழங்கினார்.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தீவிர நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மத்திய – மாநில அரசுகள் சில தளர்வுகளை அளித்து வருகிறது.

இருப்பினும், இந்த ஊரடங்கால் கட்டுமானத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், சலவைத்தொழிலாளி, தையல் தொழிலாளி, சுமை தூக்குவோர், சாலையோர வியாபாரிகள் போன்ற தொழிலாளர்கள் வருவாய் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். அதனை அவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி வாங்கி சென்றனர். நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!