17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலகுண்டில் பயங்கரம்: போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நபரை கத்தியால் குத்திகொலை செய்த வாலிபர்; வத்தலக்குண்டில் பரபரப்பு!

வத்தலகுண்டில் பயங்கரம்: போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நபரை கத்தியால் குத்திகொலை செய்த வாலிபர்; வத்தலக்குண்டில் பரபரப்பு!

எழுதியவர்: Askar May 19, 2020, 5:30 pm

இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற நபரை தடுத்த போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த நபரை கத்தியால் குத்திகொலை செய்த வாலிபர்; வத்தலக்குண்டில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே EB.காலனியைச் சேர்ந்தவர் நவீந்திரன் தற்போது கொரோனா தோற்று தடுப்பு பணியில் காவல்துறையினருடன் போலீஸ் நண்பர்கள் குழுவில் நவீந்திரன் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் காமராஜபுரம் பகுதியில நவீந்திரன் அவரது நண்பர்கள் உடன் அப்பகுதியில் சென்றுள்ளனர். அந்தவழியாக ஷேக் முகமது என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று உள்ளார் அவரை மறித்த நவீந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இப்பகுதியில் ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கூறி தடுத்து நிறுத்தி உள்ளார் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பானதால் அப்பகுதியினர்  வந்து சண்டையிட்ட இருசக்கர வாகனத்தில் வந்த ஷேக்முகமதுவை அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து சென்ற சேக் முகமது மீண்டும் இரவு ஒன்பது மணிக்கு மேல் அதே பகுதிக்கு வந்துள்ளார். அப்பொழுது நவீந்திரன் மட்டும் தனியாக அமர்ந்து இருந்துள்ளார் அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷேக்முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்தரனை ஐந்து இடங்களில் சராமாரியாக குத்தியுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் ரவீந்திரன் உடனடியாக ஷேக்முகமது நேராக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த நவீந்திரனை அப்பகுதி மக்கள் அங்கிருந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரவீந்திரன் இறந்துள்ளார். இதை அடுத்து வீந்திரனின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சேக் முகமதுவை வெளியே விடுங்கள் எனக்கூறி மறியலிலும் ஈடுபட்டனர்.இதையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து கொலை செய்த சேக் முகமது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து நவீந்திரன் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம்குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் வத்தலகுண்டு பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே அம்மையநாயக்கனூர் வத்தலகுண்டு நிலக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவில் படிப்பறிவு இல்லாத  நிலையிலும் கைகளில் லத்தியை வைத்து கொண்டு காவலர்கள் உதவியின்றி தன்னிச்சையாக செயல்பட்டு வாகனங்களில் வருபவரிடம் பணம் பறிப்பது, மிரட்டுவது இரவு நேரங்களில் காவலர்கள் இன்றி தன்னிச்சையாக கிராமங்களில் சென்று அராஜகம் செய்வது, போன்ற பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதற்கு மாவட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காதது தான் இவ்வளவு பெரிய இழப்புக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!