ஆம்பன் புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 2-ஆம் எண் புயல்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் கடலோரப் பகுதி மற்றும் மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் அலையின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடல் நீர் கரையை கடந்து உட்புகுந்து வருகிறது. சந்திரபாடியில் 700க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் 450 பைபர் படகுகள், 50 கட்டுமரங்களை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
கடல்நீர் கரையை கடந்து ஊருக்குள் புகுவதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள தங்கள் படகுகள் சேதமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருடந்தோறும்; இயற்கை பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கரை அறிப்பு ஏற்பட்டு வருவதாகவும் சந்திரப்பாடி ஊராட்சி பகுதியில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சிவராமகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவர் பிரமிளா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.







You must be logged in to post a comment.