உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லைஇந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகதியில்; வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் கல்லூரிகளில் தனிமை
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமை முகாமில் சுமார் 154 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மும்பை தாராவி பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உடனடியாக இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெளிமாநிலத்திலிருந்து உசிலம்பட்டிக்கு திரும்பிய 8 பேருக்கு கொரோனா பாதிப்பு.
எழுதியவர்: mohan May 19, 2020, 3:51 pm




You must be logged in to post a comment.