மயிலாடுதுறை மாவட்டம் தலையுடையான்பத்து மற்றும் மருதம்பள்ளம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 5 கிலோ அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்.144 தடை உத்தரவு பிறப்பித்த நாள் முதல் அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை பள்ளிக்கு செல்லாத நிலையில் மாணவர்கள் பாடம் பயிலவும் உணவுக்காகவும் அதிகம் சிரமப்பட்டு பள்ளிகள் இயங்காத நிலையில் சீர்காழி கல்வி மாவட்டம் தலச்சங்காடு மற்றும் மருதம் பள்ளம் ஆகிய பள்ளிகளில் மாணவர்களின் சூழ்நிலையை அறிந்து தலைமையாசிரியர் ராமலிங்கம் மற்றும் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் கில்டாஃபிளாரன்ஸ், இந்துமதி, சுப்பையன் இணைந்து மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து தனது சொந்த நிதியிலிருந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் 5 கிலோ அரிசி 5 கிலோ காய்கறிகள் மற்றும் 500 ரூபாய் மதிக்கத்தக்க மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பு நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதேபோல் மருதம்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச் செல்வி மற்றும் சக ஆசிரியர்கள் சாந்தி, மணிமாறன், டேனியல், நேரு, ஜெசிந்தா இணைந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் 5 கிலோ அரிசி 5 கிலோ காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், சீர்காழி சமூக நலத் திட்ட வட்டாட்சியர் மலர்விழி மற்றும் தலையுடையான்பத்து ஊராட்சி மன்ற தலைவர் ரூபன் கரிகாலன் ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், மருதம்பள்ளம் ஊராட்சி தலைவர் சுமதிமதியழகன், துணைத்தலைவர் அழகுமலை மற்றும் இரு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டநனர்.மேலும் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் சீர்காழி சமூக நலத் திட்ட வட்டாட்சியர் மலர்விழி ஆகியோர் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொரோனா கிருமி நோய்த்தொற்று பற்றியும் விளக்கிக் கூறினர். மேலும் நாம் எவ்வாறு சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்







You must be logged in to post a comment.