புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் சுயநிதி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன், செயலர் பொன். ரவிச்சந்திரன், கல்லூரியின் முதல்வர் அ.ரா. பொன் பெரியசாமி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் ஆலோசனைப்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கற்றல் திறனை வீட்டிலிருந்தபடியே மேம்படுத்தும் வகையில் அடிப்படை கணக்குப்பதிவியல் “Fundamental of Accounting” பாடத்தில் வரும் புதன்கிழமை 20.5.2020 அன்று காலை 11 மணி அளவில் மின்னணு வினாடி வினா நடத்தப்படுகிறது . இப்போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது . மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் . இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் முன்பதிவு செய்து கொள்ளவும் . 20.5.2020 அன்று நடைபெற உள்ள வினாடி-வினா போட்டியில்(E- Quiz competition) கலந்து கொள்ளவும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https:/formsogle/VDGEOYWeFxYKEQvuq
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.




You must be logged in to post a comment.