17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வறண்டது சரவணப்பொய்கை

வறண்டது சரவணப்பொய்கை

எழுதியவர்: mohan May 19, 2020, 2:21 pm

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சரவணப் பொய்கை குளமானது திருப்பரங்குன்றம் ரத வீதியில் அமைந்துள்ளது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாது இருக்கும் .இந்த நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவைவிட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகாமாக இருப்பதால் இந்த குளத்தில் உள்ள நீரின் அளவு தற்பொழுது வெகுவாக குறைந்து வருகின்றது. இந்த குளத்தில் தண்ணீர் நிறைந்து இருக்கும் காலத்தில் வெளியே தெரியாத பாறை கடந்த சில நாட்களாக மூன்று அடிக்கு மேல் வெளியே தெரிகின்றது. இது குறித்து இப்பகுதி பொது மக்கள் கூறுகையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வெளியே தெரியாத பாறை கடந்த சில ஆண்டுகளாக வெளியே தெரிவதாகவும் சுமார் 5 அடிக்கு மேல் சரவணப் பொய்கையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் இப்பாறை வெளியே தெரிவதாகவும் இது கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதை உணர்த்துவதாக கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!