18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து தர வெளி மாநிலத்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து தர வெளி மாநிலத்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் May 19, 2020, 2:15 am

கொரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான தொழில்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இத்தொழிலாளர்களை தங்களுடைய சொந்த ஊருக்கு சிறப்பு இரயில்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். இருப்பினும் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் அங்காங்கே சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. அதேபோல் விருதுநகரில் கல்கத்தாவைச் சேர்ந்த 7 பேர் நடைபாதை வியாபாரம் செய்து வந்தவர்கள் மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி இருக்கும் சூழ்நிலையில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன ஏற்பாடு செய்து தர வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!