18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசின் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கடும் வாகன சோதனை..

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கடும் வாகன சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2020, 9:45 pm

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வால் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளநிலையில் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அரசின் சில தளர்வுகளால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது .இதில் விருதுநகர் _ மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட எல்லைப்பகுதிகளில் வரும் வாகனங்களை சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர் .மேலும் வரும் வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.  மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது. அவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனியார் கல்லூரியில் மருத்துவ பரிசோதனையில் உள்ளனர்.இந்நிலையில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!