17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பாதிப்பு கிராமம் பொய்கையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு-தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு..

கொரோனா பாதிப்பு கிராமம் பொய்கையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு-தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு..

எழுதியவர்: Askar May 18, 2020, 8:13 pm

கொரோனா பாதிப்பு கிராமம் பொய்கையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு-தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு..

சேர்ந்தமரம் சுரண்டை அருகே சென்னையில் இருந்து குடும்பமாக வந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிராமமே சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பொய்கை கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தெருத்தெருவாக ஓவ்வொரு வீடுகளுக்கும் சென்ற மாவட்ட ஆட்சியர், அம்மக்களிடம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை குறித்து கேட்டறிந்து அவைகளை கடைபிடித்து தனித்திருக்க கேட்டுக்கொண்டார்.

பின்னர் சுகாதார பணிகளை மேம்படுத்தவும், கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், அனைத்து பகுதிகளிலும் உரிய ஏற்பாடுகள் செய்யவும், தீவீரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!