17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள் 11 பேர் சுரண்டையில் தனிமைபடுத்தப்பட்டனர்- வீ.கே புதூர் தாசில்தார் ஏற்பாடு..

மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள் 11 பேர் சுரண்டையில் தனிமைபடுத்தப்பட்டனர்- வீ.கே புதூர் தாசில்தார் ஏற்பாடு..

எழுதியவர்: Askar May 18, 2020, 5:09 pm

மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்தவர்கள் 11 பேர் சுரண்டையில் தனிமைபடுத்தப்பட்டனர்- வீ.கே புதூர் தாசில்தார் ஏற்பாடு..

கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு இபாஸ் மூலம் அனுமதி பெற்றும், நடந்தும், பைக் மற்றும் சைக்கிள்களிலும், கிடைக்கிற லாரி, லோடு வண்டிகளிலும், மக்கள் அதிகமாக வருகிறது சில நாட்களாக அதிகரித்துள்ளது.

இப்படி வருகிறவர்களை கண்டுபிடிப்பதும்,அதன் பின் தனிமைப்படுத்துவது, உணவு ஏற்பாடு  செய்வது, பாதுகாப்பு வழங்குவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. இதே போன்று மஹாராஷ்டிராவிலிருந்து வீகே புதூர் தாலுகா பகுதிகளுக்கு வருகை தந்த  11 பேர்களை வீகேபுதூர் தாசில்தார் ஹரிஹரன் தலைமையில் அதிகாரிகள் விடுதியில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!