18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அரசு ஐடிஐ., வடிவமைத்த சாதனங்கள் ஆட்சியர் பாராட்டு

ராமநாதபுரம் அரசு ஐடிஐ., வடிவமைத்த சாதனங்கள் ஆட்சியர் பாராட்டு

எழுதியவர்: mohan May 18, 2020, 4:55 pm

திறன் வளர் துறை உதவி இயக்குநர் சை. ரமேஸ்குமார் ஆலோசனை படி, இராமநாதபுரம் அரசு தொழில் பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் சேது கார்த்திக், பாலமுருகன், பிரபாகரன், பயிற்சியாளர் முனியசாமி ஆகியோரின் உரிய கால வடிவமைப்புகளான ரேஷன் பொருட்கள் விநியோக சமூக விலகல் கருவி, கிருமி நாசினி தெளிப்பு தானியங்கி கருவியை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் இன்று (18.5.2020) பார்வையிட்டார். கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கை கால கட்டத்தில் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக மக்கள் பெற்றுச் செல்ல வசதியாக உரிய நேரத்தில் இக்கருவிகளை வடிவமைத்த உதவி இயக்குநர், அரசு ஐடிஐ., பயிற்றுநர்கள், பயிற்சியாளரை ஆட்சியர் வீரராகவராவ் பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!