17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரக பகுதிகளில் பல கட்டுப்பாடுகளோடு, சலூன் கடைகள் இயங்குவதற்கு தடையில்லை;

ஊரக பகுதிகளில் பல கட்டுப்பாடுகளோடு, சலூன் கடைகள் இயங்குவதற்கு தடையில்லை;

எழுதியவர்: Askar May 18, 2020, 4:25 pm

நோய்த் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை  பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள்  இயங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

  •  முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.
  • முடி திருத்தும் நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
  • கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம்.
  •  அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம்.
  • சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!