பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தில் கொரோனா பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.மக்கள்பாதை இயக்கத்தின் வழிகாட்டி அறிவுறுத்தலின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கிளியூர்கிராமத்தில் 18 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியைப் பின்பற்றி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கிளியூர் ஊராட்சி பொறுப்பாளர் இதயம்கோபி ஏற்பாடு செய்திருந்தார்.கிளியூர் ஊராச்சி மன்ற தலைவர் சீமான் கனி கலந்துகொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்வில் மக்கள் பாதை இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக் குமார்,கிளாட்வின், நயினார்கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், தியாகவன் சேரி ஊராட்சி பொறுப்பாளர் ஆசிரியர் குழந்தை வேலு , பந்தப்பனேந்தல் ஊராட்சி பொறுப்பாளர் திருமுருகன், மக்கள் பாதை உறுப்பினர்கள் மாரி, இராஜசேகர்,இராஜேஷ் குமார், இளங்கோவன் ஆசிரியர், கபிலன், ஆனந்த்,விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்கள்.




You must be logged in to post a comment.