17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்கள். வாகனங்களை மறித்து வசூல் செய்யும் போலீஸ்

நிலக்கோட்டை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்கள். வாகனங்களை மறித்து வசூல் செய்யும் போலீஸ்

எழுதியவர்: mohan May 18, 2020, 1:23 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமப்புறங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் தற்போது நிலவும் சூழ்நிலையின் காரணமாக வீட்டில் இருப்பதால் ஆங்காங்கே சிறுசிறு தகராறு ஏற்படுகிறது.இதனால் ஒருவருக்கு ஒருவர் சிறு சிறு சண்டைகள் ஏற்படுவதால் இன்றைய சூழ்நிலையில் காவல் நிலையத்திற்கும் செல்ல முடியாத காரணத்தால் அங்குள்ள பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து செய்து பேசி முடித்துக் கொள்கிறார்கள். அப்படி முடித்துக் கொள்ளும் போது கூட்டம் கூட்டமாக கிராமப்புறங்களில் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் தற்போது நிலக்கோட்டை பகுதியில் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. எனவே போலீஸ் அதிகாரிகள் நிலக்கோட்டையில் மட்டும் மையமாக வைத்து அதுவும் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களை பிடித்து பணம் வசூல் செய்யும் பணியை தீவிரமாக செய்துவருவதை விட்டுவிட்டு புறங்களில் அப்போது ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை மாவட்ட நிர்வாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!