07 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளபட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை தமிழக வனதுறை அமைச்சர் வழங்கினார் 

பள்ளபட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை தமிழக வனதுறை அமைச்சர் வழங்கினார் 

எழுதியவர்: mohan May 18, 2020, 11:19 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு கொரானா நிவாரணம் நலத்திட்ட உதவியை தமிழக வனதுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாலுகாவிலுள்ள  முருகதூரன் பட்டியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் மூலம்  புனித வளனார் மேம்பாட்டு கீழ் இயங்கும் புது உதயம் மற்றும் புது விடியல் மனவளர்ச்சி குன்றியோர்  இல்லத்தில் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி மாணவ , மாணவியர்ககளுக்கு சீருடை, உணவுப்பொருட்கள் மற்றும் நிதி உதவி உள்ளிட்ட நிவாரணப்  பொருட்களை தமிழகவனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் . தேன்மொழி சேகர் நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் யாகப்பன் , முன்னாள் திண்டுக்கல் பாராளமன்ற உறுப்பினர் உதயகுமார் , நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் தண்டபாணி,மாற்றுத்திறனாளிகள் இல்ல நிர்வாகிகள்  செபாஸ்டியன், ஜோஸ்லின் , தேவிபாலா  நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், முன்னால் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் குணசேகரன், ஜெயசீலன், சங்கையா பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!