18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொல் திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்:-தெஹ்லான் பாக்கவி கோரிக்கை!

தொல் திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்:-தெஹ்லான் பாக்கவி கோரிக்கை!

எழுதியவர்: Askar May 17, 2020, 10:29 pm

தொல். திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்:-தெஹ்லான் பாக்கவி கடும் கண்டனம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை வர்மா என்பவர் மிக கேவலமானமுறையில் கார்ட்டூன் வரைந்து அதைசமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளார்.

தங்களது குறுகியஅரசியல் நோக்கங்களுக்காக ஒடுக்கப்பட்டசமூக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக களமாடிக்கொண்டிருக்கும் ஒரு தலைவரை கருத்துரிமை என்றபெயரால் கேவலமான முறையில்விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

கீழ்த்தரமான இந்தசெயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துரிமையை தவறாகபயன்படுத்தி கார்ட்டூன்வெளியிட்ட வர்மா மீது தமிழக காவல்துறை கடும்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!