17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புலம் பெயர் தொழிலாளர்கள் 1460 பேர் சிறப்பு ரெயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

புலம் பெயர் தொழிலாளர்கள் 1460 பேர் சிறப்பு ரெயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2020, 8:18 pm

விருதுநகர்,சிவகங்கை,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்பல்வேறு இடங்களில் பணிபுரிந்த 1460 தொழிலாளர்கள் நாகர்கோவிலிருந்து பீகார் செல்லும் சிறப்பு ரயில் மூலம் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து மாவட்டநிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி அனுப்பி வைக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், பட்டாசு, ஆலைகள், காகித தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் பணிபுரிந்த பீகாரைச் சேர்ந்த,318 தொழிலாளர்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணி புரிந்த 185 நபர்கள், பேருந்து மூலமாக விருதுநகர் இரயில் நிலையம் வந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த 957 நபர்கள் நாகர்கோவிலிலிருந்து அதே இரயிலில் விருதுநகர் வந்தனர்.மொத்தம் 1460 பேர் இன்று (17-5-2020) பிற்பகல் 4:15 மணி சிறப்பு ரயில் மூலம் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து மாவட்டநிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு முககவசங்கள்.உணவு பொட்டலங்கள், கொரனா பரிசோதனைகள் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்படி செய்யப்பட்டிருந்தது. முன்னதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் விருதுநகர் ரயில்நிலையத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!