17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூட்டுக்கொள்ளை அடிக்க திட்டமிட்ட ஆறு நபர்கள் அபாயகரமான ஆயுதங்களுடன் கைது..

கூட்டுக்கொள்ளை அடிக்க திட்டமிட்ட ஆறு நபர்கள் அபாயகரமான ஆயுதங்களுடன் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2020, 8:15 pm

மதுரை ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் விஜய் ஆனந்த் ரோந்து பணியில் இருந்தபோது பாரதியார் ரோடு கடைசியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆறு நபர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் சரவணக்குமார், மணிகண்டன், ராமசுப்ரமணியன், விக்னேஷ், காளிமுத்து, மணிகண்டன் என தெரியவந்தது ஆகவே அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய கத்திகள், அருவாள்கள், உருட்டுக்கட்டை, மிளகாய்பொடி பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆறு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை செய்த போது ஆறு நபர்களும் சேர்ந்து ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுக்கொண்டு இருந்ததாக ஒப்புக்கொண்டனர்.ஆகவே ஆறு நபர்களையும் நேற்று16.05.2020-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!