17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உடைந்த மின்கம்பத்தை சீர் செய்ய உயிர் பலிக்காக காத்திருக்கும் கீழக்கரை மின்சார வாரியம்.. பொறுப்பில்லாமல் அலட்சிய போக்கில் பதில் கூறும் அதிகாரி..

உடைந்த மின்கம்பத்தை சீர் செய்ய உயிர் பலிக்காக காத்திருக்கும் கீழக்கரை மின்சார வாரியம்.. பொறுப்பில்லாமல் அலட்சிய போக்கில் பதில் கூறும் அதிகாரி..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2020, 6:50 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல இடங்களில் மோசமான நிலையில் மின் கம்பங்களை காண முடியும், பல்வேறு இழுப்புக்கு பிறகு அவை சரி செய்யப்படும். அந்த வரிசையில் கஸ்டம்ஸ் ரோடு பகுதியில் இன்று17.5.2020 காலை அடையாளம் தெரியாத வாகனம் மின் கம்பத்தின் மீது மோதி மின்கம்பம் முறிந்து கீழே விழுந்து உயிர் பலி ஏற்படும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது.

அதை மின்சார ஊழியர்கள் வந்து பார்வையிட்டு சென்ற பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பழுதடைந்த மின் கம்பத்தை எப்பொழுது சரி செய்வீர்கள் என்று கீழக்கரை துணை மின் பொறியாளர் (AE) வெற்றி வேல் இடம் கேட்டபோது பொறுப்பற்ற முறையில்,  “மின் கம்பத்தின் மீது மோதிய வாகனத்தை கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூல் செய்த பின்பு மின்கம்பத்தை சரி செய்யப்படும்”  என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அப்பகுதி மக்கள் மின்கம்பத்தை உடனடியாக சரி செய்து தரவேண்டும் இல்லை என்றால் மின் கம்பம் சரிந்து விழுந்தால் பல உயிர்ச்சேதம் ஏற்படும் என்று அச்சத்தில் உள்ளார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!